11 23
இலங்கைசெய்திகள்

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

Share

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துநர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் (24.12.2024) மாலை நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் (25.12.2024), அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் – காரைநகர் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் (R.Chandrasekar) இது குறித்து கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...