விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணம்
நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2.5 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது.
சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.