“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவதே தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாகக் கூடியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, அரசில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் தமது கட்சியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனியாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
#SriLankaNews