tamilni 364 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

Share

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...