10 44
இலங்கைசெய்திகள்

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் – நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம்

Share

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் – நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம்

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரை கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து தென்கொரியா நோக்கி 181 பேருடன் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்து சம்பவம் மட்டுமின்றி தென்கொரியாவை முழு உலகையும் உலுக்கி சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மீதம் உள்ளவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பறவை மட்டுமின்றி மோசமான வானிலையும் இந்த கோர விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் விமானிகள் உள்ளிட்ட பலரும் விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

அந்நாட்டின் ஊடக அறிக்கைகளின்படி, “விமானத்தின் சக்கரங்கள் உள்ளிட்ட லேண்டிங் கியர் தரையிறங்கும் போது செயல்படவில்லை.

எனவேதான் வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சக்கரங்களில் பறவை சிக்கியிருந்தால் கூட இதுபோல் அவை செயல்படாமல் போக வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் 3 கி.மீ., நீளமுள்ள விமான ஓடுபாதையில் அந்த விமானம் ஏன் இவ்வளவு வேகமாக வந்தது என்பது தான்.

மேலும், இந்த விமானம் முன்னரே திட்டமிடப்பட்டு வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்யப்பட்டது என்றால் ஏன் தீயணைப்பு வீரர்கள் யாரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதுபோல் லேண்டிங் கியர் பழுதானால் அந்த விமானம் நீண்ட நேரத்திற்கு வானில் வட்டமிட வேண்டும்.

அதாவது, பழுதுக்கான தீர்வை கண்டுபிடிக்கும் வரையோ அல்லது தீப்பிடிப்பதை தடுக்க எரிபொருள் முழுவதுமாக காலியாகும் வரையோ வட்டமிட வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது.

ஆனால், இந்த விமானம் வழக்கத்திற்கு மாறாக தரையிறங்குவதற்கு தாயாராகும் முன்னர் வானில் வட்டமிடவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, இதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Share
தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...