24 664559e641d7d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் பலியாகிய 16 இலங்கை இராணுவ வீரர்கள்

Share

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் பலியாகிய 16 இலங்கை இராணுவ வீரர்கள்

ரஷ்ய – உக்ரைன் போரின் போது 16 இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேறியமை தொடர்பில் 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரத்மித பண்டார தென்னகோன்(Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய போரில் ஈடுபட்டுவரும் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்கள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சரால் மனித கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் 0112-401146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போருக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், போரின் முன் வரிசையில் இருந்த எமது நாட்டின் இராணுவ வீரர் ஒருவரை தன்னால் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், ரஷ்ய மொழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...