4 28
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Share

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை சஜித்தோ அனுரவோ மீள கட்டியெழுப்பவில்லை.

சிலிண்டர் விலை 6,000 ரூபாய் வரை உயரும் போது சஜித், அனுர போன்றவர்கள் எங்கே இருந்தனர் என்று கூற வேண்டும்.

அதற்கான பதிலை அவர்கள் வழங்கவில்லையாயின் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமற்றவர்களாவர்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...