சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

24 6643009736883

சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

சஜித் பிரேமதாச வீடமைப்புத் துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இடைநடுவில் விட்டுச் சென்ற பணிகளை பூர்த்தி செய்ய 15 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாக வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 44053 வீடுகளின் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அவற்றை பூரணப்படுத்தி பொதுமக்களிடம் கையளிப்பதற்காக 15,244.58 மில்லியன் தேவைப்படுவதாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

Exit mobile version