6 10
இலங்கைசெய்திகள்

இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Share

உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் இது ஒரு புதிய நிக்கோடின் அடிமைத்தனத்தைத் தூண்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, சிறுவர்கள் பெரியவர்களை விட சராசரியாக ஒன்பது மடங்கு அதிகமாக ‘வேப்பிங்’ (Vaping) எனப்படும் இ-சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

புகையிலைத் துறை ” இளம் வயதினரை இலக்கு” வைத்து இ-சிகரெட்டுகளை சந்தைப்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ‘தீங்குகளைக் குறைக்கும்’ (harm reduction) பொருளாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது சிறு வயதிலேயே சிறுவர்களை நிக்கோடினுக்கு அடிமையாக்குகிறது என்று வைத்தியர் எட்டியன் க்ரூக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இ-சிகரெட் பயன்படுத்தும் பெரியவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆகும். 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 1.5 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினர் ‘வேப்பிங்’ பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 138 கோடியாக இருந்தது, இது 2024இல் 120 கோடியாகக் குறைந்துள்ளது. பெண்களிடையே இதன் பயன்பாடு 2010இல் 11%இல் இருந்து 2024இல் 6.6%ஆகக் குறைந்துள்ளது.

ஆண்களிடையே 2010இல் 41.4%இல் இருந்து 32.5% ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், உலகளவில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்.

இ-சிகரெட்டுகளைக் கட்டுப்படுத்த நாடுகள் முயற்சித்தாலும், 2024ஆம் ஆண்டின் இறுதி வரையில், 62 நாடுகளில் இ-சிகரெட் கொள்கைகள் இல்லை, மேலும் 74 நாடுகளில் இ-சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...