அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி மரணம்

rtjy 234

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி மரணம்

ஹோமாகம முல்லே கிராம பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி திடீர் சுகயீனத்தால் ஒருவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தினிதி திமாரா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம்(18) காலை பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில், சக நண்பியுடன் வீட்டிலிருந்து பாட வேலைகளை செய்துள்ளார்.

இதன்போது தாயாரிடம் சென்று கை வலிப்பதாக கூறியுள்ளார்.பின்னர் சிறுமியின் தாய் மகளின் கையில் ஒருவகை வலிநிவாரணி தைலத்தை தடவியுள்ளார்.

இதனையடுத்து மாணவி தனது பாட வேலைகளை தொடர்ந்த வேளை திடீரென வாந்தி எடுத்து தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், தாயார் மகளை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் மகளை பரிசோதித்த வைத்தியர்கள் மகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version