சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் 7 பேரும் , அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6 பேரும் மேற்படி உயிரிழந்துள்ளனர்

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

download 20

452 வீடுகள் பகுதியளவிலும் 56 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 30 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் ஆறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version