tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சும் ரணில்

Share

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ”நான் ரணில் ராஜபக்ச இல்லை” என்று சொல்வது அவரது இயலாத் தன்மையை காட்டுவதாகவும், பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சுவதை வெளிப்படுத்துவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் தனது இல்லத்தில் நேற்றையதினம் (19.07.2023) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச பல்வேறுபட்ட சர்வதேச கோரங்களில், நான் 13க்கு அப்பாற் சென்று கொடுப்பேன் என்பதை திரும்ப திரும்ப சொல்லி இருக்கின்றார்.

நீங்கள் ரணில் விக்கிரமசிங்க என்பது எங்களுக்கு தெரியும். 13வது சீர்திருத்தத்தில் என்ன இருக்கிறது என்பதுவும் எமக்கு தெரியும்.

நாடாளுமன்றத்திற்கு திரும்ப சென்று ஒரு சட்டம் கொண்டுவரத் தேவையில்லை என்பதுவும் எமக்கு தெரியும். ஆகவே 13ஐ நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் சொல்கிறோம்.

ரணில் விக்ரமசிங்க இப்படியான கருத்துக்களை சொல்லி, நாடாளுமன்றம் செல்ல வேண்டும், ஒப்புதல் எடுக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம், அவர் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அச்சப்படுகின்றார் என்பதை தான் காட்டுகிறது.

13ஐ நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஒப்புதல் கொடுத்திருக்கின்றார், சஜித் பிரேமதாச ஒப்புதல் கொடுத்திருக்கின்றார், ஜே.வி.பியினர் ஒப்புதல் கொடுத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்ற ஒரு கதை.

ஆகவே அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண பொலிஸ் முறைமையை நியமித்தால் போதுமானது.

சகல மாகாணங்களுக்கும் அந்த மாகாண பொலிஸ் முறைமையை நியமிக்க விருப்பம் இல்லா விட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நீங்கள் கொடுங்கள்.

அதற்கான ஒரு சட்டத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். வடக்கு கிழக்குக்கு மாத்திரம் நாங்கள் கொடுக்கின்றோம் என்பதை நீங்கள் செய்யலாம்.” என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...