திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

tamilni 309

திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 124 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கமைய, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு இந்நட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெல் சந்தைப்படுத்தும் சபை, திறைசேரிக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 664 கோடி ரூபாவை செலுத்த வேண்டியிருந்ததாகவும், இந்த தொகை செலுத்தப்படவில்லையென்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version