100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த யாழ்தேவி
இலங்கைசெய்திகள்

100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த யாழ்தேவி

Share

100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த யாழ்தேவி

யாழ்தேவி தொடருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு வவுனியா நோக்கி பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்தது.

யாழ்தேவி தொடருந்து, அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09.07.2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தி செயற்றிட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி தொடருந்து பயணித்திருந்தது.

அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி தொடருந்து மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை தொடருந்து நிலையத்திலிருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.

குறித்த தொடருந்து பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு தொடருந்து நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

தொடருந்தில் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர். இதேவேளை, தொடருந்து பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்புக்கான தொடருந்து சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...