24 666535e9a7cb1
இலங்கைசெய்திகள்

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

Share

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் (NDCU) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர (Sudath Samaraweera) தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் (Dr. B.K. Buddhika Mahesh) தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில், விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 05 பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 06 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 08 பிரிவுகளும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...