தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
குறித்த பாதையில் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்றைய தினம் 3 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 4 கார்கள், 3 சொகுசு பஸ்கள், 2 ஜுப் வண்டிகள் மற்றும் லொறி என்பன விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment