முல்லைத்தீவில் வீடு உடைத்து தங்க நகைகள் திருட்டு!

11

முல்லைத்தீவு- முள்ளியவளை, மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று இரவு (3) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த அலுமாரியில் வைக்கப்பட்ட 10 பவுண் நகைகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வீட்டிற்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக முள்ளியவளை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்கள்.

மேலும், சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
ஐக்கிய மக்கள்

Exit mobile version