tamilni 418 scaled
இலங்கைசெய்திகள்

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் மாற்றம்

Share

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் மாற்றம்

பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக் குறைந்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், 2012ஆம் ஆண்டு ஐந்தாம் தரத்தில் 327,849 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டில் அது 347,500 ஆக அதிகரித்தது. எனினும் 2022ஆம் ஆண்டில் 328,000 மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு பாடசாலை காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 16.07 வீதமாக இருந்த போதிலும் தற்போது அது 7 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...