15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

Share

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டு கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றவர்களில் பெரும்பாலானவர்களே இவ்வாறு வாக்களிப்பைப் புறக்கணித்து கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இந்நாட்டின் தீர்மானமிக்க தேர்தல் அல்லாமை, அரசியல் மற்றும் தேர்தல் முறைமையின் மீது நம்பிக்கையின்மை, விரக்தி, வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான செலவைத் தாங்க முடியாமை, இந்தத் தேர்தல் தொடர்பில் போதிய அறிவின்மை மற்றும் தொடர்ந்து பல தேர்தல்கள் நடந்தமை போன்ற காரணங்களால், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து சுமார் 10 இலட்சம் பேர் வாக்களிக்கச் செல்லவில்லை என்று, தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முன்னைய தேர்தல்களை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதமும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்...

Untitled 43
உலகம்செய்திகள்

சர்வதேச எரிபொருள் நெருக்கடி: பிரிட்டனில் வரலாறு காணாத விலை உயர்வு!

ஐக்கிய ராச்சியத்தில் டீசல் விலை 2022 டிசம்பருக்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில்...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிராமப்புற வலுவூட்டலுக்கான ‘பிரஜசக்தி’ திட்டம்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆய்வு!

சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், சமூகத்தில் பொருளாதாரப் பலன்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு...

Untitled 41
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி: பாகிஸ்தான் மற்றும் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!

கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அதிக கப்பல்கள் செல்கின்றன, ஆனாலும் மத்திய கிழக்கு...