tamilni 126 scaled
இலங்கைசெய்திகள்

கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

Share

ஒரு வருட காலப்பகுதியில் மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய 08 இலட்சம் பேரின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற குழுக்கூட்டத்திலேயே மேற்குறித்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புக்களில் பெரும்பாலானவை ஏழை மக்களது இணைப்புக்கள் என்பது தெரியவந்துள்ளது.

துறைசார் கண்காணிப்புக்குழு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த மின்துண்டிப்பினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்நிலைமையினால் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பு உருவாகுவதற்கு ஏதுவான சூழலாக இது காணப்படும்.

எனினும், நிர்ணய செலவுக்கு ஏற்ற விலையாக மின் கட்டணத்தை மாற்ற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபைக்கு சில முன்மொழிவுகளை குறித்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, இவ் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 03 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை வகுக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க மின்சார சபைக்கு உத்தரவிடுவது. வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறப்பு நியாய அலகு முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தொழில் முறையைப் பாதுகாக்கும் விலைக் கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்களை பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 14
இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்.. சுட்டிக்காட்டும் ஆளும் தரப்பு!

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம்...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஏற்பட போகும் ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த காலத்தின் மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரம் மீண்டு வந்தாலும், இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும்...

9 13
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் குற்றங்களில் நெருங்கிய தொடர்பில் முக்கிய அதிகாரிகள்: பகிரங்கப்படுத்தும் சரத் பொன்சேகா

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் கொழும்பில் ஊடவியலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ச மற்றும்...

8 14
இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு எதிராக ரணில் – சஜித்தின் தீர்மானம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக்...