வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

arested 1

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருவேறுபட்ட சம்பவங்கள் தொடர்பில், வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.

காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Exit mobile version