வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

24 66c584aba0b91

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன.

விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version