images 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி: 3 மாதங்களில் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

Share

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்கான கேள்வி மனுக்கள் (Tenders) கோரப்பட்டு, தற்போது தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர (Werahera) பிரதான காரியாலய வளாகத்தில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அச்சிடும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றது.

இன்னும் 3 மாத காலத்திற்குள் புதிய இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் தகவல்களின்படி, நாடு தழுவிய ரீதியில் சுமார் 4 இலட்சம் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் புதிய வாகனங்கள் மற்றும் சேதமடைந்த தகடுகளுக்குப் பதிலாக விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.

அச்சிடும் பணிகள் வழமைக்குத் திரும்பியவுடன், முன்னுரிமை அடிப்படையில் (Priority basis) நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்குத் தகடுகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக இலக்க அட்டைகளுடன் (Temporary plates) பயணிக்கும் வாகன உரிமையாளர்களின் சிரமங்கள் குறையும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...