யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

Covid

யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுப் பெண் ஒருவர், மானிப்பாய், நவாலியைச் சேர்ந்த 68 வயதுப் பெண் ஒருவர் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் ஆகியோரே கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version