மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

bike accident 1

October 13, 2020, Riga, Latvia, damaged motorbike on the city road at the scene of an accident

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை சம்பவ இடத்தில் நின்றவர்கள் உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்தார் என்று சிலாபம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர், பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Exit mobile version