இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொட்டலங்களை வீச முயன்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த, சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொட்டலங்களை சோதனையிட்ட போது, 22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி மின்னேற்றிகள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இவாறு, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் நாளைய தினம் மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

