முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கை: நேற்று ஒரே நாளில் 981 பேர் கைது!

MediaFile 2 6

இலங்கைப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ (The Whole Country Together) என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், நேற்று (டிசம்பர் 15) ஒரே நாளில் 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான தேவையை குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை தடுத்தல் ஆகியன இதன் அடிப்படை நோக்கங்களாகும்.

அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 513 கிராம் ஹெரோயின், 890 கிராம் ஐஸ், 35,349 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Exit mobile version