முதியோருக்கான டிசம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு: நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்!

aswesuma 6 1

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

பயனாளிகள் நாளை (18) முதல் தத்தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த ஒக்டோபர் மாதத் தரவுகளின்படி, 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் (3 பில்லியனுக்கும் அதிக) அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version