முடக்கப்பட்டது வவுனியா கல்மடு கிராமம்!

80ebcdee 238a226f curfew guard

முடக்கப்பட்டது வவுனியா கல்மடு கிராமம்!

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முடக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு, 10 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறித்த கிராமம் முடக்க நிலையில் இருந்து விடுபடும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version