12 25
இலங்கைசெய்திகள்

மாதக்கணக்கில் நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் கொடூர மோதல் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

Share

மாதக்கணக்கில் நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் கொடூர மோதல் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு

s Agree To Ceasefire In Gaza
இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க (America) அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல் மற்றும் காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்த நிலையில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...