MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

Share

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி எம். உதயகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த வாரம் மட்டும் 02 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இங்கு நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, சுகாதார அமைச்சும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து டிசம்பர் 8ஆம் திகதி முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினைப் பிரகடனப்படுத்தி, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் கடந்த வாரம் வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக, சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தில், பொலிஸார், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சோதனையின்போது, நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதி என்ற காரணத்தினால், பொதுமக்கள் தங்கள் சூழலைத் தூய்மைப்படுத்தி, நுளம்பு தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...