போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி ஒதுக்கீடுகளையும் கொடுப்பனவு அதிகரிப்புகளையும் ஜனாதிபதி இன்று அறிவித்தார்.
விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியைப் பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

