பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

man death body

 

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் இணைந்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் காவல்துறையினர், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்ட போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version