பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்: அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு!

33 8 696x392 1

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் (Detention Order) வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனஇதற்கிடையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு (Writ Petition) மீதான விசாரணை இன்று (நவ 01) உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

இந்த விசாரணையை முன்னிட்டு, பிள்ளையானின் சட்டத்தரணியும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் (CID) சென்று பிள்ளையானைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கம், பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வரும் நிலையில், பிள்ளையானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில்தான் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் பிள்ளையான் இதுவரை சுமார் ஏழரை மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதன் மூலம் தனது உரிமை மீறப்பட்டுள்ளது எனவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவே நாளை உயர் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Exit mobile version