நிதிக்காக சீனாவுடன் ஒப்பந்தம்!!

IFF China Report 2018 33

சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாவாகும்.

இலங்கைக்கான சீனத் தூதரகம் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version