நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உறுதியளித்தனர்.

அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாச்சார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சர் ஜூலியன் ஹில்லிற்கும் (Julian Hill), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (டிசம்பர் 10) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

அண்மையில் முழு நாட்டையும் பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 3.5 மில்லியன் டொலர் நிதி உதவிக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தச் சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் உறுதி: இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தமது ஆதரவை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் வழங்கும் என அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

Exit mobile version