துவாரகா விவகாரத்தில் பின்வாங்கிய இந்திய புலனாய்வு பிரிவு
துவாரகா உயிருடன் இருக்கின்றார் என்ற விடயம் இந்திய பாதுகாப்பு படைக்கும், புலனாய்வு துறைக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு ரீதியாக பாரதூரமான விடயமாக தான் இது இருந்திருக்க வேண்டும்.ஏனெனில் நீண்ட காலமாக இலங்கை அரசிற்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தப்பட்ட விடயமாக காணப்பட்டது.
துவாரகா விவகாரத்தில் இந்திய புலனாய்வு பிரிவு பின்வாங்க இரண்டு காரணங்கள் பிரதானமாக இருக்கலாம், ஒன்று துவராக தொடர்பில் வெளியான காணொளி போலியென அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இரண்டாவது இதன் பின்னணியில் அவர்களே கூட இருக்கலாம் என கூறினார்.