துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

Lanka Turkey

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அல்அல்தீனும், துருக்கித் தூதரகத்தில் இன்று, இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஒரு தொழில்முனைவு நாடாக பரிணமிக்கும் பயணத்தில் துருக்கி குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version