தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

Chemmani Mass Graves

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மேலும் 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version