24 66c9f0e469876
இலங்கை

தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை : குகதாசன் எம். பி

Share

தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை : குகதாசன் எம். பி

இலங்கை தீவுக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (Kathiravelu Shanmugam Kugathasan) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை (Trincomalee) ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை தமிழரசுக் கட்சி 75 வருடங்களாக இழந்த உரிமைகளை பெறுவதற்காக போராடி வருகிறோம்.

இந்த பகுதியில் சுமார் 3000 கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு குடியிருக்கும் மக்களுக்கான காணி உரிமம் இல்லை.

இது தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் அதிகாரிகளுடன் பேசியுள்ளதுடன் நாடாளுமன்றத்தில் கூட பேசியுள்ளேன்.

மக்கள் உரிமைகளை விட பல கிராமங்களுக்கு செல்லும் போது வாழ்வாதாரம் வீதி அபிவிருத்திகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

உரிமைகள் விடுதலைப் போராட்டங்கள் உரிமைகளை மற்றும் அபிவிருத்தி போன்றவைகளையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்.

கடற்றொழிலாளர் சமூகத்தின் பல பிரச்சினைகளுல் ஒன்றாக சுருக்கு வலை காணப்படுகிறது மற்றும் இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ளனர்.

சல்லி பகுதியில் இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் எனவே எல்லோரும் இணைந்ததான தீர்வுகளை இணைந்து பெற்றுக் கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

images 1 4
இலங்கைசெய்திகள்

மீண்டும் வீட்டுக்குச் செல்லுமாறு அழுத்தம் இல்லை – மக்களை தெளிவுபடுத்தினோம்! யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்ட முகாமையாளர் மறுப்பு!

தலைவாக்கலை, வட்டகொடை, யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, உடனடியாக...

images 22
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர் தகவல்களைப் பகிர வேண்டாம்: தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை பாயும் – அமைச்சு எச்சரிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர்...

24 66f6d1015ea81
அரசியல்இலங்கைசெய்திகள்

2025 இல் வரி வருமானம் ரூ. 4,033 பில்லியன்: வாகன இறக்குமதி மூலம் ரூ. 350 பில்லியன் ஈட்டியுள்ளது அரசாங்கம்!

2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் (ஜனவரி – ஒக்டோபர்) அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம்...