இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

Share
25 679cdf33055cf
Share

ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

யாழ்(Jaffna) போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் மீள் அழைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று(31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும். பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே உள்ளார், அவருடை சிறந்த சேவையினூடாக இதுவரை காலமும் காணப்பட்ட நீண்ட காத்திருப்போர் நோயாளர் பட்டியல் அவரது சேவைக் காலத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களை பார்வையிட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதில் பெரும்பான்மையாக அவரது சேவையினை பெறுபவர்களாக பாடசாலை மாணவர்கள் கணப்படுகின்றனர். மேலும் அவர் எந்தவொரு தனியார் மருத்துவமனைகளிலும் சேவையாற்றுவதில்லை.

இவருடைய திடீர் இடமாற்றத்தினால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளில் பலனை கேள்விக்குறியாக்கும் எனவும் எனவே உடனடியாக அவரை போதனா வைத்தியசாலைக்கு விடுவித்து உதவ வேண்டும் அல்லது மாற்று ஆளணியினை நியமிக்க வேண்டும்.

அத்துடன் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவரும் மாற்றீடு ஆளணியின்றி இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...