21 8
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் சுயநல அரசியல்: தமிழரசுக் கட்சியில் புறக்கணிக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள்

Share

சுமந்திரனின் சுயநல அரசியல்: தமிழரசுக் கட்சியில் புறக்கணிக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள்

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு இணங்காத காரணத்தினால், அவரது சுயநல அரசியலுக்காக பெண்களை பொது தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தனர் என அக்கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்வாங்ககின்றனர் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார்.

அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன். தமிழரசுக் கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர்.

தமிழரசுக் கட்சியில் இருக்கும் பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை.

நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள்.

தமிழரசுக் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...