சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு குறைக்கப்படும்! அமைச்சு அளித்த விளக்கம்

21

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு குறைக்கப்படும்! அமைச்சு அளித்த விளக்கம்

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் குறைக்கப்படும் என வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கைவிடும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சி கூறியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்களுக்குப் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version