24 668a6d6303375
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Scholarship For Students From Low Income Families

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிபர் நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த (உ/த) மற்றும் தரம் 1 முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக அதிபர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கல் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதி, நேரம், இடங்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட புலமைப்பரிசில் பெறுபவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அடுத்த சில நாட்களில் அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் க.பொ.த (உ/த) கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஏற்கனவே வலய மட்டத்தில் அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்பட இருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் 30,000 ரூபா புலமைப்பரிசில் தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் 6000 ரூபா புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் உதவித் தொகை வழங்கும் புலமைப்பரிசில் திட்டமும் இதன் கீழ் செயற்படுத்தப்படும்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் 12,000 ரூபா உதவித்தொகை, புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்கப்படும். மேலும் அடுத்த மாதம் முதல் மாதம் 3000 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

அதன்படி, மாவட்ட மட்டத்தில் இந்தப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான புதிய தகவல்களைப் பெற அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பின்தொடருமாறு அதிபர் நிதியம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...