காட்டு யானை தாக்கி இருவர் பலி
நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியாகலை – கெஹெல்எல்ல பிரதேசத்தில் இன்று (29.07.2023) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை – பரகஹகலே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானை தாக்கி மரணம்
இதேவேளை, ஹந்துங்கொட – ஹிம்பிலியாகொட பகுதியில் சைக்கிளில் பயணித்த 69 வயதுடைய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment