கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்
கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா
துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும் என்று அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இப் பிடயம் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
டெல்டா தொற்று உலகில் பல நாடுகளில் பரவிவருவதைப் போன்று இலங்கையிலும் மிக வேகமாகப் பரவிவருகின்றது. இத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதை இயன்றளவில் தவிர்ப்பதோடு தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளியே செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள். இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாகும். நாள்பட்ட நோய்கள் இருப்பின் வீட்டை விட்டு வெளியே செல்வதை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள் – என்றுள்ளது.
Leave a comment