கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், கொழும்புத்துறைக் கடற்கரையில் 65 வயது முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வழமையாக கடலுக்குக் குளிக்கச் செல்லும் இவர், இன்றும் வழமைபோன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார்.
இவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிச் சென்றபோது கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது