இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் அநுர அரசு அளித்த வாக்குறுதி!

Share

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் அநுர அரசு அளித்த வாக்குறுதி!

Investigations About Killings Journalists Begin

எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம்.

ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் நிபந்தனைகள் இன்றி செயற்படும்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடக்கம் படுகொலை செய்யப்பட்ட சகல ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகள் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டிருந்தன. அதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சேவையிலிருந்து இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்திய நிலை காணப்பட்டது.

அத்துடன், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பான படுகொலைகள் மட்டுமல்ல ஊழல் தொடர்பான சகல விடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கூட நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

நாம் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக தேடிப் பார்த்தபோது காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் போன்றவற்றின் அறிக்கைகளின் பிரகாரம் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

அதனால் நாம் அந்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து முறையாக மேற்கொண்டு வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...