7 4
இலங்கைசெய்திகள்

உச்சம் தொட்ட முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விலைகள்

Share

இலங்கையில் (Sri Lanka) முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெரேரா (Andrew Perera) குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பை காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், புதிய முச்சக்கர வண்டியின் விலை சுமார் 650,000 ரூபாயினால் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளின் விலை 700,000 ரூபாயாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது, வெளிநாட்டு கையிருப்புகளில் வாகன இறக்குமதியின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, இந்த முடிவு கவனமாக எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...