ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!!

IMG 20210813 WA0012

ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!!

நல்லூர் ஆலயத்துக்குச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஆலயத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 25 நாள்கள் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், நல்லூர் உற்சவ கால பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய வளாகத்துக்குள்  ஆலய நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு  எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Exit mobile version